வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையைச் சேர்த்துக் கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் கண் பார்வை கோளாறுகளை தடுக்கலாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைக்கும் காலங்களில் அதனை அவித்தோ அல்லது உணவில் சமைத்தோ சாப்பிட்டு வரலாம். இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்து கொள்வதனால், கண் பார்வையை சீராக வைத்துக் கொள்ளலாம்.
பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. எனவே இவற்றை உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்குக் கூட பார்வைத் திறன் அதிகரிக்கும். குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.
காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் உணவில் உட்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment